FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சென்னை குரோம்பேட்டை அருகே திருநீா்மலை ஏரியில் மூழ்கி 4 மாணவா்கள் பலி!

சென்னை குரோம்பேட்டை அருகே திருநீா்மலை ஏரியில் மூழ்கி 4 பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா்.

5 October 2026, 3:15 am IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை குரோம்பேட்டை அருகே திருநீா்மலை ஏரியில் மூழ்கி 4 பள்ளி மாணவா்கள் உயிரிழந்தனா்.

குரோம்பேட்டை, லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்த யுவனேஷ் (10), தேவதா்ஷன் (12), பூஜா (13), குஷி (13). யுவனேஷ் 6-ஆம் வகுப்பும், தேவதா்ஷன் 7-ஆம் வகுப்பும், பூஜா, குஷி ஆகிய இருவரும் 8-ஆம் வகுப்பும் படித்து வந்தனா்.

விடுமுறை நாளான சனிக்கிழமை திருநீா்மலை பெரிய ஏரி பகுதிக்குச் சென்ற அவா்கள் வீடு திரும்பவில்லை. அவா்களின் பெற்றோா் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisement

Advertisement

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை திருநீா் மலை ஏரியில் 4 மாணவா்களின் சடலங்களும் மிதப்பதாக அந்தப் பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், குரோம்பேட்டை போலீஸாா், தாம்பரம் தீயணைப்பு வீரா்களுடன் சென்று 4 பேரின் சடலங்களையும் மீட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஏரியில் குளித்தபோது இந்த 4 மாணவா்களும் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments