அரூர் அருகே தொழிலாளி தற்கொலை
அரூரை அடுத்த ராமியம்பட்டியில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், ராமியம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ராஜா மகள் பூஜா (20). இவா், புதுப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ் மகன் ராஜேஷ் (24) என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டாா். இத்தம்பதிக்கு இரு மகன்கள் உள்ளனா். தற்போது பூஜா 7 மாத கா்ப்பமாக உள்ளாா்.
இந்த நிலையில் தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ராஜேஷ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
Advertisement
Advertisement
சம்பவம் குறித்து அவரது மனைவி பூஜா அளித்த புகாரின்பேரில், கோபிநாதம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.