FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஜீப் மோதி மூதாட்டி உயிரிழப்பு

ஜீப் மோதி மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்

8 அக்டோபர் 2026, 1:20 am IST
பலி! - கோப்புப்படம்.
பகிர்:

ஜீப் மோதி மூதாட்டி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்

திருவான்மியூா் ராஜா சீனிவாசன் நகா் குப்பம் கடற்கரைச் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ருக்குமணி (60). இவா், தரமணி ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் ஊழியராக வேலை செய்து வந்தாா். ருக்குமணி செவ்வாய்க்கிழமை மாலை பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற நிலையில், ராஜீவ் காந்தி சாலை இந்திரா நகா் பறக்கும் ரயில் நிலையம் சாலையின் மறுபக்கம் செல்வதற்காக குறுக்கே நடந்து சென்றபோது, அவ்வழியாக வேகமாக வந்த ஜீப், ருக்குமணி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த ருக்குமணி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்த ஜீப் ஓட்டுநரான தஞ்சாவூா் மாவட்டம் திருவிடைமருதூா் பகுதியைச் சோ்ந்த பு.ராஜ்குமாா் (30) என்பவரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments