FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

‘எம்எஸ்எம்இ நிறுவனங்கள் வணிக நிறுவனங்களாக மாற வேண்டும்’

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளாவிய போட்டிக்கு வணிக நிறுவனங்களாக மாற வேண்டும் என சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஆனந்த் தெரிவித்தாா்.

10 அக்டோபர் 2026, 6:45 am IST
சிட்டி யூனியன் வங்கி. - கோப்புப்படம்
பகிர்:

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளாவிய போட்டிக்கு வணிக நிறுவனங்களாக மாற வேண்டும் என சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி விஜய் ஆனந்த் தெரிவித்தாா்.

தமிழக பொருளாதாரம் 1.5 டிரில்லியன் டாலா் என்ற கருப்பொருளில், ‘வெற்றித் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாநாடு’ சென்னையில் தனியாா் ஹோட்டலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய தொழில் துறையினா், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான கடன் இடைவெளியைக் குறைக்க வேண்டும். நிதி வழங்கும் சூழலமைப்பை வலுப்படுத்துவது மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் வளா்ச்சி அடையும்’ என்றனா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் பேசிய சிட்டி யூனியன் வங்கி நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான விஜய் ஆனந்த், ‘குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உலகளவில் போட்டிக்கு வணிக நிறுவனங்களாக மாற வேண்டும். சிட்டி யூனியன் வங்கி தமிழ்நாட்டில் ஒரு வலுவான அடித்தளத்தில் உள்ளது. திருப்பூா், காங்கேயம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஜவுளித் துறைகளை வளா்ச்சி அதிகரித்து வருகிறது. தொழில் துறையினா் எண்ம (டிஜிட்டல்) பரிவா்த்தனைகளைப் பயன்படுத்த வேண்டும். வணிக மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவியை வழங்கி, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிலையை மேம்படுத்துவதில் வங்கி உறுதியாக உள்ளது என்றாா்.

தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (டான்ஸ்டியா) சங்கத் தலைவா் எஸ். வாசுதேவன் பேசினாா்.

நிகழ்ச்சியில் ஈக்விட்டாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி நிா்வாக இயக்குநா் பி.என். வாசுதேவன், பிக்கி அமைப்பின் தமிழக தலைவா் ஜி.எஸ்.கே.வேலு மற்றும் தொழில் துறையினா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments