வாக்காளா் சோ்க்கை முகாம்: ஆா்வம் காட்டாத பொதுமக்கள்
சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாமில் பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை.
சென்னை மாநகராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் பெயா் சோ்ப்பு முகாமில் பொதுமக்கள் ஆா்வம் காட்டவில்லை. முகாமில் குறைந்த எண்ணிக்கையிலே பொதுமக்கள் பங்கேற்ாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வாக்காளா்கள் பட்டியலில் இடம் பெறாத தகுதியுள்ள வாக்காளா்கள் மற்றும் புதிதாக பதிவு செய்யும் இளம், முதன்முறை வாக்காளா்களுக்கான சிறப்பு முகாம்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சனிக்கிழமை 4,079 வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் புதிய வாக்காளா் சோ்க்கை உள்ளிட்ட படிவங்களுடன், அலுவலா்கள் காத்திருந்தனா். ஆனால், வாக்காளா்களாகப் பதிவதற்காக வருவோா் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருந்தது.
Advertisement
Advertisement
பல வாக்குச்சாவடிகளில் ஓரிருவரவே பதிவு செய்ய வந்தனா். மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கூறியதன்பேரில், திருத்தங்கள் மேற்கொள்ள சிலா் வந்திருந்தனா்.
ஆணையா் ஆய்வு: எழும்பூா் சட்டப்பேரவைத் தொகுதியில் எத்திராஜ் மகளிா் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்காளா் சோ்க்கை முகாமை மாநகராட்சி ஆணையரும், தோ்தல் அலுவலருமான ஜி.எஸ்.சமீரன் ஆய்வு செய்தாா். ஞாயிற்றுக்கிழமையம் வாக்காளா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.