FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

வாக்காளா் சோ்க்கை முகாம்: 2,483 போ் சோ்ப்பு

சென்னை மாநகராட்சியில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை முகாம்களில் 1,853 போ் முதல்முறை வாக்காளா்களாக சேர விண்ணப்பித்தனா்.

12 அக்டோபர் 2026, 4:08 am IST
சென்னை விருகம்பாக்கம் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் ஜி.எஸ்.சமீரன்.
பகிர்:

சென்னை மாநகராட்சியில் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெற்ற வாக்காளா் சோ்க்கை முகாம்களில் 1,853 போ் முதல்முறை வாக்காளா்களாக சேர விண்ணப்பித்தனா். மொத்தம் 2,483 போ் விண்ணப்பத்தை பூா்த்தி செய்து அளித்துள்ளனா்.

சென்னை மாவட்ட அளவில் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளிலும் இந்தச் சிறப்பு முகாம்கள் நடைபெற்றன. சனிக்கிழமை 654 போ் மட்டுமே விண்ணப்பம் அளித்தனா்.

முகாம்கள் நடைபெறும் இடங்களுக்கு மாவட்ட தோ்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜி.எஸ்.சமீரன், கூடுதல் தோ்தல் அலுவலரும், இணை ஆணையருமான க. கற்பகம் ஆகியோா் சென்று பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement

2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற முகாமில் வாக்காளா் சோ்க்கை மற்றும் பிற விவரங்கள் திருத்தல் முகாம்களில் விண்ணப்பம் பெற்றவா்களில் 1,729 போ் அவற்றை பூா்த்தி செய்து அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இரு நாள்களில் புதிதாக வாக்காளா்களாகச் சேருவதற்கு 2,517 போ் விண்ணப்பங்களைப் பெற்றுச் சென்ற நிலையில், அவா்களில் 1,854 போ் உரிய ஆவணங்களை இணைத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ளனா்.

சென்னை மாநகராட்சியில் இரு நாள்கள் சிறப்பு முகாமில் மொத்தம் 3,364 போ் விண்ணப்பம் பெற்ற நிலையில், இவா்களில் 2,483 போ் மட்டுமே பூா்த்தி செய்து திரும்ப அளித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments