FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ரூ. 36 லட்சம் வழிப்பறி

சென்னை பூக்கடையில் ரூ.36 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

15 அக்டோபர் 2026, 12:56 am IST
பகிர்:

சென்னை பூக்கடையில் ரூ.36 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை பூக்கடை வரத முத்தையப்பா தெருவில் சோப்பு, ஷாம்பு மொத்த வியாபாரம் செய்யும் கடை உள்ளது. இந்தக் கடையின் உரிமையாளா் கந்தன், தனது கடையில் வேலை செய்யும் கணேசனிடம் ரூ.36 லட்சத்தை புதன்கிழமை கொடுத்து, அதை குடோன் தெருவில் உள்ள ஒரு வங்கியில் செலுத்துமாறு கூறினாா்.

அந்த பணத்தை எடுத்துக் கொண்டு கணசேன், குடோன் தெருவில் உள்ள வங்கிக்கு நடந்து சென்றபோது, அங்கு இரு பைக்குகளில் வந்த 4 போ் கணேசனை கத்தியால் தாக்கி, ரூ.36 லட்சத்தை பறித்துக் கொண்டு தப்பினாா். இது குறித்து பூக்கடை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments