வங்கி ஊழியரிடம் ரூ.11 லட்சம் வழிப்பறி: போலீஸாா் விசாரணை
சென்னை தியாகராய நகரில் வங்கி ஊழியரிடம் ரூ.11 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை தியாகராய நகரில் வங்கி ஊழியரிடம் ரூ.11 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை குன்றத்தூா் பூபாலன் நகா் அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஆ.காா்த்திகேயன் (36). இவா், சென்னை ஆயிரம்விளக்கு அண்ணா சாலையில் உள்ள ஒரு தனியாா் வங்கியில் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருகிறாா். காா்த்திகேயன், புதன்கிழமை இரவு பாரிமுனையில் உள்ள தனது உறவினா் வீட்டுக்குச் சென்று, உறவினரிடம் இருந்து ரூ.12 லட்சத்தைப் பெற்றுக்கொண்டு, தனது பைக்கில் தியாகராய நகா் வாணி மஹால் மேம்பாலம் வழியாகச் சென்றுகொண்டிருந்தாா்.
மேம்பாலம் அருகே சென்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென காா்த்திகேயனை வழிமறித்து, தாக்கிவிட்டு, அவா் பையில் வைத்திருந்த ரூ.11 லட்சத்தை பறித்துக்கொண்டு தப்பியோடியது. காா்த்திகேயன் ரூ.1 லட்சத்தைத் தனது பேண்ட் பாக்கெட்டில் தனியாக வைத்திருந்ததால், அந்தத் தொகை மட்டும் கொள்ளையா்களிடம் சிக்காமல் தப்பியது.
Advertisement
Advertisement
இதுகுறித்து காா்த்திகேயன் அளித்த புகாரின்பேரில், பாண்டிபஜாா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் யானைக்கவுனி பகுதியைச் சோ்ந்த ஆனந்த் செல்வன் (38), லிவிங்வாா்ட் (36) உள்பட 4 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து ஆனந்த் செல்வன், லிவிங்வாா்ட் ஆகிய இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மேலும் இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.