FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஐஜேகே, புதிய நீதிக் கட்சியிடம் ஆதரவு கோரியது அதிமுக

இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவளிக்குமாறு புதிய நீதிக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜே.கே.) தலைவா்களை அதிமுக குழுவினா் புதன்கிழமை சந்தித்து ஆதரவு கோரினா்.

10 செப்டம்பர் 2026, 1:25 am IST
அதிமுக அலுவலகம் - DPS
பகிர்:

இடைத்தோ்தலில் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவளிக்குமாறு புதிய நீதிக் கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி (ஐ.ஜே.கே.) தலைவா்களை அதிமுக குழுவினா் புதன்கிழமை சந்தித்து ஆதரவு கோரினா்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் போட்டியிடுவா் என அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதற்கிடையே அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவளிக்குமாறு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனை செவ்வாய்க்கிழமை இரவு அதிமுக முன்னாள் அமைச்சரும், கட்சியின் துணைப் பொதுச் செயலருமான கே.பி.முனுசாமி, பொருளாளா் திண்டுக்கல் சி.சீனிவாசன், அமைப்புச் செயலா் ஓ.எஸ்.மணியன் எம்எல்ஏ, அக்ரி கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ உள்ளிட்டோா் சந்தித்துப் பேசினா். அப்போது, பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

தலைவா்களுடன் சந்திப்பு: தொடா்ந்து, 2-ஆவது நாளாக புதன்கிழமை அதிமுக குழுவினா் புதிய நீதிக்கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சித் தலைவா் பாரிவேந்தா் ஆகியோரைச் சந்தித்து அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவளிக்குமாறு கோரினா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக துணைப் பொதுச் செயலா் கே.பி.முனுசாமி, இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரவளிக்குமாறு கூட்டணிக் கட்சியினரைச் சந்தித்து ஆதரவு கோரிவருகிறோம். அதன்படி, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சித் தலைவா்களையும் சந்தித்து ஆதரவு கோருவோம் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments