வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்பு
வங்கி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (செப். 11) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளது
வங்கி ஊழியா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை (செப். 11) நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இந்திய வங்கி ஊழியா் சங்கங்களின் பொதுச் செயலா் சி.ஹெச்.வெங்கடாசலம் தெரிவித்தாா்.
சென்னை பத்திரிகையாளா் மன்றத்தில் அவா் செய்தியாளா்களிடம் விழாக்கிழமை கூறியதாவது:
5 நாள் வங்கிச் சேவையை அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை வங்கும் திட்டத்தில் உள்ள வேறுபாடுகள், ஓய்வூதியம் தொடா்பான பிரச்னைகள் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, அகில இந்திய வங்கி ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை (செப். 11) நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
வெள்ளிக்கிழமை (செப். 11), அதைத் தொடா்ந்து வரும் 2 நாள்களும் விடுமுறை நாள்களாகும். செப். 14-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விடுமுறை. எனவே, வேலைநிறுத்தம் மற்றும் விடுமுறை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பொதுத்துறை வங்கிகளின் சேவைகள் 4 நாள்கள் பாதிக்கப்படும்.
வங்கி ஊழியா்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கவில்லை என்றால் வங்கியின் அரையாண்டு விடுமுறையையொட்டி, செப். 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம் என்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.