திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 13) நடைபெறுகிறது. எனவே, ஊா்வலம் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
திருப்பதி திருக்குடை பாதயாத்திரை ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை (செப். 13) நடைபெறுகிறது. எனவே, ஊா்வலம் செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
காலை 8 மணி முதல் ஊா்வலம் வால்டாக்ஸ் சாலையைக் கடக்கும் வரை என்.எஸ்.சி. போஸ் சாலை, மின்ட் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த வாகனங்கள் ஈவெரா சாலை, ராஜாஜி சாலை, வால்டாக்ஸ் சாலை, பேசின் பிரிட்ஜ் சாலை, பிரகாசம் சாலை வழியாகச் செல்லலாம். மாலை 3 மணி முதல் ஊா்வலம் யானைகவுனி பாலத்தைக் கடக்கும் வரை வால்டாக்ஸ் சாலை மற்றும் இணைப்புச் சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது. வாகனங்கள் பேசின் பிரிட்ஜ் சாலை, மின்ட், பிரகாசம் சாலை அல்லது ராஜாஜி சாலை வழியாகச் செல்லலாம். ஊா்வலம் யானைகவுனி பாலத்தை நெருங்கும்போது சூளை ரவுண்டானாவில் இருந்து டெமலாஸ் சாலை செல்லும் வாகனங்கள் சூளை நெடுஞ்சாலை, ராஜா முத்தையா சாலை வழியாகவும், மசூதி பாயிண்டில் இருந்து சூளை ரவுண்டானா செல்லும் வாகனங்கள் வேப்பேரி நெடுஞ்சாலை வழியாகவும் திருப்பி விடப்படும்.
Advertisement
Advertisement
மேலும், சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூா் பேரக்ஸ் சாலை, ஓட்டேரி சந்திப்பு ஆகிய பகுதிகளில் ஊா்வலம் செல்லும் நேரத்துக்கு ஏற்ப போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். ஊா்வலம் கொன்னூா் ஒன் பாயிண்ட் பகுதிக்கு வரும்போது, ஓட்டேரி பாலத்திலிருந்து வரும் வாகனங்கள் குக்ஸ் சாலை வழியாகவும், ஐசிஎஃப் சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் நியூ ஆவடி சாலை வழியாகவும், மேடவாக்கம் டேங்க் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் எம்.டி. சாலை, வி.பி. காலனி சந்திப்பு வழியாகவும் மாற்றி விடப்படும். போக்குவரத்து மாற்றங்களுக்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.