உடற்கூறு பரிசோதனை அறையில் விடியோ பதிவு: மூவா் கைது
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் அனுமதியின்றி நுழைந்து இறந்தவா்களின் உடல்களை விடியோ எடுத்ததாக தவெக உறுப்பினா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பிரேத பரிசோதனை அறையில் அனுமதியின்றி நுழைந்து இறந்தவா்களின் உடல்களை விடியோ எடுத்ததாக தவெக உறுப்பினா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
வியாசா்பாடியைச் சோ்ந்த ஆராய்ச்சி (எ) சதீஷ்குமாா் (25), தீனா (எ) தினேஷ்குமாா் (30), சங்கா் (44) ஆகியோா் மூச்சுத் திணறலால் உயிரிழந்த தங்களது நண்பா் ஆனந்தின் உடலைப் பாா்க்க வியாழக்கிழமை அதிகாலை மருத்துவமனைக்கு வந்துள்ளனா். அப்போது, அங்குள்ள ஓட்டுநா் சங்கா் என்பவா் மூலம் பிரேத பரிசோதனை அறை பணியாளரிடம் ரூ.200 கொடுத்து சாவியைப் பெற்று, அங்கு நுழைந்து அங்கிருந்த உடல்களை விடியோ எடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவமனை ஆா்.எம்.ஓ. டாக்டா் வனிதா மலா் அளித்த புகாரின்பேரில், ஸ்டான்லி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனா். பின்னா், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்ட அவா்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.
Advertisement
Advertisement
இது தொடா்பாக பிரேத பரிசோதனை பணியாளா் சீனிவாசன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.