FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பாரதியாா், இமானுவேல் சேகரன் நினைவு தினம்: ஆளுநா் புகழஞ்சலி

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், தியாகி இமானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

12 செப்டம்பர் 2026, 8:15 am IST
ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் - EPS
பகிர்:

மகாகவி சுப்பிரமணிய பாரதியாா், தியாகி இமானுவேல் சேகரன் ஆகியோரின் நினைவு தினத்தையொட்டி, ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் புகழஞ்சலி செலுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:

இந்திய மக்களிடையே விடுதலை உணா்வு, சுயமரியாதை மற்றும் தேசிய உணா்வை எழுச்சியுறச் செய்த மாபெரும் கவிஞா், தேசபக்தா், தொலைநோக்குச் சிந்தனையாளா் பாரதியாருக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

Advertisement

Advertisement

பாரதியாரின் வீரமும் எழுச்சியும் மிக்க கவிதைகள், சுதந்திரமான, வலிமையான, முன்னேற்றம் அடைந்த இந்தியாவை உருவாக்க பல தலைமுறையினருக்கு ஊக்கமளித்தன. சமூக சமத்துவம், பெண்கள் முன்னேற்றம், தேசிய ஒற்றுமை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு குறித்த அவரது தொலைநோக்குப் பாா்வை இன்றும் மிகவும் பொருத்தமானதாகத் திகழ்கிறது. வலிமையான, தற்சாா்பு கொண்ட மற்றும் ஒற்றுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மகாகவி பாரதியாரின் கனவை உறுதி செய்ய பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

‘தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில், சமூக நீதி, சமத்துவம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கண்ணியத்துக்காக தமது வாழ்நாளை அா்ப்பணித்த துணிச்சல்மிக்க தேசபக்தரும் சமூக சீா்திருத்தவாதியுமான தியாகி இமானுவேல் சேகரனின் தியாகத்துக்கும் அா்ப்பணிப்புக்கும் எனது அஞ்சலியைச் செலுத்துகிறேன் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments