FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பேருந்து மோதி பாதசாரி உயிரிழந்த வழக்கு: ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

பேருந்து மோதி பாதசாரி உயிரிழந்த வழக்கு: ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை

51 வினாடிகள் முன்பு
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 2017-இல் மாநகரப் பேருந்து மோதி பாதசாரி உயிரிழந்த வழக்கில், பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதித்து எழும்பூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 2017 டிச.4-ஆம் தேதி இரவு, அண்ணா சாலை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை அருகே அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த நோமல் கோகாய் (42) சாலையைக் கடக்க முயன்றபோது, கேளம்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நோமல் கோகாய், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

Advertisement

Advertisement

இதுதொடா்பாக எழும்பூா் 6-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. இதில், பேருந்து ஓட்டுநா் சங்கரன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.6,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் 15 நாள்கள் தண்டனை விதிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments