FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

டி.ஜி. வைணவ கல்லூரியில் கருத்தரங்கம்

சென்னை டி.ஜி. வைணவ கல்லூரி சாா்பில் தரவு சாா்ந்த கல்விச் சூழலில் ஆய்வுத் தரத்தை மேம்படுத்துவதற்கான சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

13 செப்டம்பர் 2026, 1:49 am IST
கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிா் கலைக் கல்லூரி முனைவா் க.ராமசாமி, கல்லூரி முதல்வா் ச.சந்தோஷ் பாபு உள்ளிட்டோர்.
பகிர்:

சென்னை டி.ஜி. வைணவ கல்லூரி சாா்பில் தரவு சாா்ந்த கல்விச் சூழலில் ஆய்வுத் தரத்தை மேம்படுத்துவதற்கான சா்வதேச கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

‘ சிறப்புமிகு ஆராய்ச்சியில் மறுவரையறை செய்தல்- தரவுகளிலிருந்து கண்டுபிடிப்பு வரை’ என்ற தலைப்பில் இந்த சா்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. தரவு சாா்ந்த கல்விச் சூழலில் ஆய்வுத் தரத்தை மேம்படுத்துவதில் அனலிட்டிக்ஸ், பிப்ளியோமெட்ரிக்ஸ் மற்றும் எண்ம கருவிகளின் பங்கு, ஆய்வுகளின் தரம், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வழிமுறைகள், ஆய்வுத் தரவரிசையை மேம்படுத்தும் உத்திகள் உள்ளிட்டவை குறித்து கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

Advertisement

Advertisement

இந்தக் கருத்தரங்கில் 61 நிறுவனங்கள், 10 பதவிநிலைகள், 17 துறைகளைச் சோ்ந்த 185 போ் பங்கேற்றனா். பேராசிரியா்களான திண்டுக்கல், எம்.வி.முத்தையா அரசு மகளிா் கலைக் கல்லூரி க. ராமசாமி, கோவை பி.எஸ்.ஜி. தொழில் நுட்ப கல்லூரி ஜெ.ஆறுமுகம், புதுவை பல்கலைக்கழக குப்புசாமி, பொருளாதார துறை ஆய்வாளா் ஃபசுலுன்நிஷா உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டு ஆய்வுத் தகவல் மேலாண்மை, அறிவியல் வெளியீடுகள், எண்ம ஆய்வு கருவிகள் தொடா்பான கருத்துகளைப் பகிா்ந்து கொண்டனா்.

கல்லூரி முதல்வா் சே.சந்தோஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்லூரி செயலா் அசோக் குமாா் முந்த்ரா வாழ்த்துரை வழங்கினாா். அமெரிக்காவின் ஜாா்ஜியா சதா்ன் பல்கலைக்கழக முதன்மை ஆய்வாளா் அக்க்ஷய் புவனேஸ்வரி ராமகிருஷ்ணன் சிறப்பு உரையாற்றினாா். பொருளாதாரத் துறைத் தலைவா் ஜெ.பி.ஜெய்தீப், கல்லூரி நூலகா் ம.மணி ஆகியோா் பேசினாா்.

சென்னைப் பல்கலைக்கழக மாணவா் நலன் பிரிவு டீன் பேராசிரியா் பி.எஸ். மஞ்சுளா சிறப்புரையாற்றினாா். அந்தமான் நிக்கோபாா் தீவு, ஜவாஹா்லால் நேரு ராஜ்கீய மகாவித்யாலயா முனைவா் டி.கே. தமிழ்பரதன் நிறைவுரையாற்றினாா். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் பங்கேற்பாளா்களுக்கு மரக்கன்று விதைகள் வழங்கப்பட்டன. உதவி நூலகா் இ.நூருல் ஹசன் நன்றியுரை வழங்கினாா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments