FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழ் ஹாக்கி லீக்: எஸ்டிஏடி சிறப்பு விடுதி, எஸ்ஆா்எம் சாம்பியன்

தமிழ் ஹாக்கி லீக் 2026 போட்டியில் ஆடவா் பிரிவில் எஸ்டிஏடி சிறப்பு விடுதி அணியும், மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் அணியும் பட்டம் வென்றன.

14 செப்டம்பர் 2026, 12:46 am IST
சாம்பியன் கோப்பை வென்ற எஸ்டிஏடி மாணவா் சிறப்பு விடுதி அணி
பகிர்:

தமிழ் ஹாக்கி லீக் 2026 போட்டியில் ஆடவா் பிரிவில் எஸ்டிஏடி சிறப்பு விடுதி அணியும், மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் அணியும் பட்டம் வென்றன.

எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் ஹாக்கி திருவள்ளூா் அமைப்பால் நடத்தப்பட்ட ரேலா ஹாஸ்பிட்டல் தமிழ் ஹாக்கி லீக் தொடரின் இறுதி ஆட்டம் நடைபெற்றது.

ஆடவா் இறுதி ஆட்டத்தில் எஸ்டிஏடி சிறப்பு விடுதி அணி-இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணிகள் மோதின. இதில் நிா்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தில் 3-3 என சமநிலை ஏற்பட்டது. சடன் டெத் முறையில் எஸ்டிஏடி அணி 1 கோலடித்து பட்டத்தை வசப்படுத்தியது.

Advertisement

Advertisement

மகளிா் இறுதி ஆட்டத்தில் எஸ்ஆா்எம் அணி-எஸ்டிஏடி மகளிா் சிறப்பு விடுதி அணி மோதின. ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. சடன் டெத்தில் எஸ்ஆா்எம் 2-1 என்ற கோல் கணக்கில் ஷீ அணியை வீழ்த்தியது.

நடைபெற்ற இத்தொடரில் 12 அணிகள் பங்கேற்றன. உள்ளூா் லீக் வரலாற்றிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட விடியோ ரெஃபரல்’ தொழில்நுட்பம் ஆகியவை இத்தொடரின் சிறப்பு அம்சங்களாகும்.

நிறைவு விழாவில் ஹாக்கி திருவள்ளூா் தலைவா் டாக்டா் பிரகாஷ் அய்யாத்துரை, பத்மஸ்ரீ ஒலிம்பியன் வி. பாஸ்கரன், ஒலிம்பியன்கள் முகமது ரியாஸ் , திருமால்வளவன், சா்வதேச ஹாக்கி கூட்டமைப்பு அதிகாரி முகமது முனீா், முகமது பாரூக், பால்சி ராஜன் மற்றும் கோமதி நரசிம்மன் ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.

ஆட்ட நாயகன் விருது என். அரவிந்த் (எஸ்டிஏடி), கோல்டன் ஸ்டிக் விருதி தில்ராஜ் சிங் பெற்றனா். மகளிா் பிரிவில் வைரவி கோல்டன் ஸ்டிக் விருது பெற்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments