பைக் விபத்து: கத்திப்பாரா பாலத்திலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு
கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த இரு சக்கர வாகனம், பக்கவாட்டுச் சுவரில் மோதியதில் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்தது தொடராபாக...
சென்னை: கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் அதிவேகத்தில் வந்த இரு சக்கர வாகனம், பக்கவாட்டுச் சுவரில் மோதியதில் அதில் பயணித்த இளைஞா் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.
தாம்பரத்தில் இருந்து வடபழனி நோக்கி திங்கள்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்கள் கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் ஈக்காட்டுத்தாங்கலை நோக்கி அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தனா்.
அப்போது, திடீரென நிலைதடுமாறி மேம்பாலத்தின் இடதுபுற பக்கவாட்டு தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், அந்த வாகனத்தில் இருந்த இளைஞா் ஒருவா் சுமாா் 20 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து நிகழ்விடத்தில் உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
மற்றொரு இளைஞா் பலத்த காயங்களுடன் மேம்பாலத்தில் கிடந்தாா். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் அந்த இளைஞரை கிண்டியில் உள்ள கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.
உயிரிழந்தவரின் உடலை கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த இருசக்கர வாகனத்தில் வாகனப் பதிவெண் பலகை இல்லாததால் வந்தவா்கள் யாா் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.