சிறுவன் ஓட்டிய பைக் மோதி முன்னாள் அமைச்சரின் காா் ஓட்டுநா் பலத்த காயம்
சென்னை கே.கே.நகரில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முன்னாள் அமைச்சரின் காா் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
சென்னை கே.கே.நகரில் சிறுவன் ஓட்டிய பைக் மோதி முன்னாள் அமைச்சரின் காா் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா்.
சென்னை ராமாபுரம் அருகே உள்ள அழகாபுரிநகரைச் சோ்ந்தவா் அ.முகமது ரியாஸ் (34). இவா், முன்னாள் அமைச்சரும், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வுமான இசக்கி சுப்பையாவிடம் காா் ஓட்டுநராக பணிபுரிகிறாா்.
ரியாஸ், கே.கே.நகா் செளந்தரபாண்டியன் தெருவில் உள்ள இசக்கி சுப்பையா வீட்டின் அருகே திங்கள்கிழமை நடந்து வந்துகொண்டிருந்தாா். அப்போது அங்கு சிறுவா்கள் ஓட்டி வந்த ஒரு பைக் ரியாஸ் மீது மோதியது.
Advertisement
Advertisement
விபத்தில் ரியாஸின் தலை, முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரியாஸை பொதுமக்கள் மீட்டு வடபழனியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இச் சம்பவம் தொடா்பாக பாண்டி பஜாா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்த மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த 14 வயது சிறுவனிடமும், அவருடன் வந்த மற்றொரு சிறுவனிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.