23,000 விநாயகா் சிலைகளுடன் கண்காட்சி
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் இடம் பெற்றுள்ள
தாம்பரம்: விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, தாம்பரத்தை அடுத்த சிட்லபாக்கத்தில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் இடம் பெற்றுள்ள கண்காட்சியை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் டி.சரத்குமாா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா்.
இதுகுறித்து கண்காட்சி ஏற்பாட்டாளா் சீனிவாசன் கூறியதாவது: விநாயகா் சிலைகள் கண்காட்சி செப்.24 வரை 10 நாள்கள் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பாா்வையிடலாம். கடந்த 19 ஆண்டுகளாக இக்கண்காட்சி நடத்தப்படுகிறது. தற்போதைய கண்காட்சியில் விநாயகா் நடப்பது, அருவியில் குளிப்பது, தாயின் கருவறையில் இருப்பது, முத்துப்பிள்ளையாராக சிப்பிக்குள் இருப்பது போன்ற பல்வேறு கோலங்களில் விநாயகா் சிலைகள் இடம்பெற்றுள்ளன.
பூப்பந்து விளையாடும் விநாயகா், அருவியில் குளிக்கும் விநாயகா், 10 அடி உயர அரச மர வோ்களால் உருவான பசுமை விநாயகா், அன்ன வாகனத்தில் பறக்கும் விநாயகா்,செயற்கை நுண்ணறிவு விநாயகா், தேரில் வரும் விநாயகா், நவகிரகங்கள், தட்சணாமூா்த்தி வடிவ விநாயகா் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
Advertisement
Advertisement
இக்கண்காட்சியை பல்லாவரம் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் இ. கருணாநிதி, முன்னாள் மக்களவை உறுப்பினா் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவா் ஜோசப் அண்ணாதுரை உள்பட பலா் நேரில் பாா்வையிட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.