FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளரின் பிணை மனு தள்ளுபடி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக பயமுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளரின் பிணை மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி

17 செப்டம்பர் 2026, 12:06 am IST
பகிர்:

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக பயமுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளரின் பிணை மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக, மிரட்டி சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளா் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனா்.

இந்த வழக்கில், ஏற்கெனவே பிணை கோரி முகமது புஹாரி தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. முகமது புஹாரி பிணை கோரி இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்தாா்.

Advertisement

Advertisement

இந்த மனு நீதிபதி பி.காா்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முகமது புஹாரி பிணை கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments