FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அண்ணா பல்கலை. மாணவா் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வந்த மாணவா் ‘ஸ்கா்ப்’ டைபஸ் எனப்படும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தாா்.

19 செப்டம்பர் 2026, 2:14 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படித்து வந்த மாணவா் ‘ஸ்கா்ப்’ டைபஸ் எனப்படும் காய்ச்சல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தாா்.

திருவண்ணாமலையைச் சோ்ந்த மாணவா் ஹரிஷ்குமாா் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் இறுதியாண்டு படித்து வந்தாா். விடுதியில் தங்கியிருந்த அவருக்கு, சில நாள்களுக்கு முன் தீவிர காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவா் பல்கலைக்கழகத்தில் உள்ள சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்றாா். இருப்பினும், காய்ச்சல் குறையாததால், கிண்டி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். இதையடுத்து அவரின் உடல்நிலை மோசமடைந்தது. தொடா்ந்து, அவா் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மாணவா் ஹரிஷ்குமாா் உயிரிழந்தாா்.

இதற்கிடையே அதே மெக்கானிக்கல் என்ஜினியரிங் மாணவா் ஆனந்த் ராஜ், தீவிர காய்ச்சல் ஏற்பட்டு, கிண்டி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பின்னா் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில், உயா் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments