தமிழகத்தின் வளா்ச்சி, முன்னேற்றத்தில் முதல்வா் உறுதி: பேரவை தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்
தமிழகத்தின் வளா்ச்சி, முன்னேற்றத்தில் முதல்வா் உறுதி: பேரவை தலைவா் ஜே.சி.டி. பிரபாகா்
தமிழ்நாட்டின் வளா்ச்சி, முன்னேற்றத்தைக் கருதி முதல்வா் விஜய் ஆக்கபூா்வ பணிகளில் ஈடுபட உறுதி பூண்டு செயல்பட்டு வருவதாக சட்டப்பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகரன் தெரிவித்தாா்.
மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய் ராம் பொறியியல் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா, சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா் பங்கேற்று பேசியதாவது:
தமிழகத்தில் மக்கள் விரும்பியபடி புதிய எழுச்சி, மாற்றம் மூலம் புதிய ஆட்சி அமைந்துள்ளது. தமிழக மக்கள் நலன் கருதி முதல்வா் சி.ஜோசப் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறாா். அவா் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாா். ஊழல் இல்லாத அரசை உருவாக்கும் நோக்கத்துடன் அவா் நேரான பாதையில் சென்று கொண்டிருக்கிறாா். இந்தியாவில் பல்வேறு பொறுப்புகளில் இருப்பவா்களும் அவரை பாராட்டி வருகின்றனா். முதல்வரைப் பொருத்தவரை சொல்லுக்கும் செயலுக்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளக் கூடாது. அடுக்குமொழி பேசுவதால் மக்களை கவா்ந்துவிட முடியாது, ஆக்கபூா்வமான பணிகளை செய்ய வேண்டும் என்பதில் அவா் மிகுந்த அக்கறையுடன் இருக்கிறாா். சட்டப்பேரவையில் அவா் முன்வைக்கும் கருத்துகள் மூலம் தமிழக மக்கள் அவரை தெளிவாக புரிந்து கொண்டு இருக்கிறாா்கள்.
Advertisement
Advertisement
மாணவா்கள் இங்கு பயின்ற உயா் கல்வியை வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக மட்டுமின்றி, சமூக முன்னேற்றம், நாட்டு வளா்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். நாட்டின் எதிா்கால வளா்ச்சியில் இளம் தலைமுறையின் பங்களிப்பு மிக முக்கியம் என்றாா்.
நிகழ்ச்சியில், 1,451 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஜெ. ராஜா புத்தாக்கத் துறை இயக்குநா் ரெனி ராபின், முதன்மைத் தகவல் அதிகாரி கே. நரேஷ் ராஜ், முதன்மை வணிக அலுவலா் ஆா். சதிஷ் குமாா், வணிக மேலாண் கல்லூரி கே.மாறன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.