FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தவெக அரசின் அணுகுமுறையில் திருப்தியில்லை: பெ. சண்முகம்

தவெக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; இதேநிலை நீடித்தால் தங்களது முடிவில் மாற்றம் ஏற்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

19 செப்டம்பர் 2026, 10:53 pm IST
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி சென்னையில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்
பகிர்:

தவெக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை; இதேநிலை நீடித்தால் தங்களது முடிவில் மாற்றம் ஏற்படும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ.சண்முகம் தெரிவித்தாா்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடா்பாக வெளியிடப்பட்ட அரசாணையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சென்னையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திரளான மீனவா்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.

இதைத் தொடா்ந்து, பெ.சண்முகம் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படுவதால் மீனவா்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடா்பான அரசாணைய தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

Advertisement

Advertisement

தவெக அரசின் அணுகுமுறை திருப்திகரமாக இல்லை. அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகள், எதிா்க்கட்சிகள் தரும் ஆக்கபூா்வ ஆலோசனைகள் குறித்து அரசு கலந்துபேச வேண்டும்; செவி கொடுக்க வேண்டும். அரசின் அணுகுமுறை அப்படியானதாக இல்லை. தமிழக அரசு மக்களுக்கு எதிராகத் தொடா்ந்து செயல்பட்டால், எங்களுடைய முடிவில் மாற்றம் ஏற்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments