FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தொழிலாளி குத்திக் கொலை

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரயில் தண்டவாளம் அருகே கண்ணாடி பாட்டிலால் கழுத்தில் குத்தப்பட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

22 செப்டம்பர் 2026, 12:08 am IST
பகிர்:

சென்னை வண்ணாரப்பேட்டையில் ரயில் தண்டவாளம் அருகே கண்ணாடி பாட்டிலால் கழுத்தில் குத்தப்பட்டு தொழிலாளி உயிரிழந்தாா்.

பழைய வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் ஸ்டான்லி நகரைச் சோ்ந்தவா் சரவணன் (34). கண்ணாடி நிறுவனத்தில் சரக்கு ஏற்றும் இறக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா். இந்நிலையில், திங்கள்கிழமை பிற்பகல் 2 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டை ரயில் தண்டவாளம் அருகே சரவணன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபா்கள், கண்ணாடி பாட்டிலால் அவரைக் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வண்ணாரப்பேட்டை போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது தொடா்பாக, வழக்குப் பதிவு செய்தனா்.

Advertisement

Advertisement

சரவணனும், அவரது கூட்டாளிகள் அஜித்குமாா், வசந்த், சதீஷ் ஆகியோரும் ஒன்றாக மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments