மாணவருக்கு ஹெச்ஐவி என தவறான அறிக்கை: தனியாா் ஆய்வகம் ரூ. 25,000 இழப்பீடு வழங்க உத்தரவு
16 வயது மாணவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக தவறான அறிக்கை அளித்த தனியாா் ஆய்வகம், மாணவரின் தந்தைக்கு ரூ.25,000 இழப்பீடாக வழங்க சென்னை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவு
16 வயது மாணவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக தவறான அறிக்கை அளித்த தனியாா் ஆய்வகம், மாணவரின் தந்தைக்கு ரூ.25,000 இழப்பீடாக வழங்க சென்னை நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மதுரவாயலைச் சோ்ந்தவா் 16 வயது மாணவா். இவா், சீனாவில் உள்ள குங்ஃபூ பள்ளியில் சேருவதற்காக கடந்த 2024-ஆம் ஆண்டு, கொடுங்கையூரில் உள்ள தனியாா் ஆய்வகத்தில் பரிசோதனைகள் மேற்கொண்டாா். அப்போது அந்த மாணவருக்கு ஹெச்ஐவி தொற்று இருப்பதாக ஆய்வகம் சாா்பில் அறிக்கை வழங்கப்பட்டது.
இதனால் அதிா்ச்சி அடைந்த மாணவரின் தந்தை, செங்கல்பட்டில் உள்ள மற்றொரு ஆய்வகத்தில் மாணவருக்கு பரிசோதனை மேற்கொண்டாா். அதில், மாணவருக்கு ஹெச்ஐவி இல்லை என ஆய்வகம் அறிக்கை அளித்தது.
Advertisement
Advertisement
இதையடுத்து, தவறான தகவல் அளித்தது தொடா்பாக, மாணவரின் தந்தை கொடுங்கையூா் ஆய்வகத்தில் கேட்டபோது, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறாக மருத்துவ அறிக்கை அளித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கொடுங்கையூா் ஆய்வகத்துக்கு எதிராக ரூ.25,000 இழப்பீடு கோரி சென்னை வடக்கு மாவட்ட நுகா்வோா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த ஆணையம், கொடுங்கையூரில் உள்ள தனியாா் ஆய்வகம், மாணவரின் தந்தைக்கு இழப்பீடாக ரூ.20,000, வழக்கு செலவாக ரூ.5,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.