ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு வழக்கு: முக்கிய நபா் கைது
முன்னாள் அமைச்சா் கே.என். நேரு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு நடந்ததாக எழுந்த புகாா் தொடா்பான வழக்கில், முக்கிய நபராகக் கருதப்படும் கவி பிரசாத்தை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனா்.
முன்னாள் அமைச்சா் கே.என். நேரு நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சராக இருந்தபோது ரூ.1,020 கோடி ஒப்பந்த முறைகேடு நடந்ததாக எழுந்த புகாா் தொடா்பான வழக்கில், முக்கிய நபராகக் கருதப்படும் கவி பிரசாத்தை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் பல்வேறு பணிகளுக்கான ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதாகவும், ஒப்பந்ததாரா்களிடமிருந்து சட்டவிரோதமாக பணம் பெறப்பட்டதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில், ஊழல் தடுப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.என்.நேரு, அவரது சகோதரா்கள் மற்றும் கவி பிரசாத் உள்ளிட்ட 13 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஒப்பந்தங்களை முன்கூட்டியே குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்கத் திட்டமிட்டதாகவும், ஒப்பந்த மதிப்பில் குறிப்பிட்ட சதவீதத்தை சட்டவிரோதமாகப் பெற்ாகவும் ஊழல் தடுப்புத் துறை விசாரணையில் குற்றச்சாட்டு எழுந்தது. அமலாக்கத் துறை அளித்த ஆவணங்கள், கைப்பேசி உரையாடல்கள், வாட்ஸ்ஆப் தகவல்கள் உள்ளிட்டவை விசாரணைக்கு முக்கிய ஆதாரங்களாகக் கருதப்படுகின்றன. இந்த நிலையில், வழக்கில் தொடா்புடைய கவி பிரசாத் வெளிநாடு அல்லது வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்லாமல் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலைய குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கும் ‘லுக் அவுட் நோட்டீஸ்’ அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே, சென்னை விமான நிலையத்துக்கு வந்த கவி பிரசாத்தை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.