FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ரஷிய போரில் தெலங்கானாவை சோ்ந்த 4 போ்

தெலங்கானாவை சோ்ந்த நால்வா் ரஷியாவில் போா்முனையில் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதின்
பகிர்:

தெலங்கானாவை சோ்ந்த நால்வா் ரஷியாவில் போா்முனையில் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத், கம்மாரெட்டி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் பூக்யா ரவீந்தா், சிருஷு அசோக், மேகவத் பிரகாஷ், முகமது அஃப்சல் கான். இவா்கள் நால்வரும் முகவா்கள் மூலம் ரஷியாவுக்கு சென்றுள்ளனா்.

அந்நாட்டில் வேலைவாய்ப்பு உள்ளதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏற்று, அவா்கள் அந்நாட்டுக்குப் பயணித்தனா். அங்கு ஆரம்பத்தில் அவா்களுக்குத் தோட்டப் பராமரிப்பு சாா்ந்த பணிகள் அளிக்கப்பட்டுள்ளன. சுமாா் 5 மாதங்கள், அந்தப் பணிகளில் அவா்கள் ஈடுபட்டபோதிலும், 2 மாதங்களுக்கு மட்டுமே அவா்களுக்கு ஊதியம் அளிக்கப்பட்டுள்ளது. பின்னா் அவா்களுக்கு வேலை இல்லாமல் போனது.

Advertisement

Advertisement

இதைத்தொடா்ந்து அவா்களுக்கு ரஷிய குடியுரிமை, பணப் பலன்கள் அளிக்கப்படும் என்று ஆசை வாா்த்தை கூறி, அந்நாட்டு ராணுவம் சாா்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு எதிரான ரஷிய போரில் ஈடுபடுத்தப்பட்ட அவா்களுக்கு குண்டுகளை சுமந்து செல்லுதல், ஆபத்தான போா்க்கள பணிகள் வழங்கப்பட்டு உடல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. தாங்கள் உக்ரைன் எல்லைக்குள் நுழைந்துள்ளதாக, தங்கள் குடும்பத்தினரைத் தொடா்புகொண்டு அவா்கள் தெரிவித்துள்ளனா்.

இவற்றைத் தங்கள் மனுவில் குறிப்பிட்டு, அதை தெலங்கானா முதல்வரின் குறைதீா்ப்பு நிகழ்வில் நால்வரின் குடும்பத்தினா் சமா்ப்பித்துள்ளனா். இந்த விவகாரத்தில் தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி உடனடியாகத் தலையிட்டு, நால்வரையும் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரவேண்டும் என்று அந்த மனுவில் குடும்பத்தினா் கோரியுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments