FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

நிதிசாா் இணையக் குற்றங்களால் படித்தவா்களும் பாதிப்பு: ஐஐடி ஆய்வு

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் தலைமையிலான ஆய்வில், படித்தவா்களும் கணிசமான அளவில் நிதிசாா் இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

1 October 2026, 12:46 am IST
பகிர்:

சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் தலைமையிலான ஆய்வில், படித்தவா்களும் கணிசமான அளவில் நிதிசாா் இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னை ஐஐடி-இன் ‘வாத்வானி தரவு அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுப் பள்ளி’ ஒத்துழைப்புடன் சென்னை ஐஐடி பேராசிரியரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பி.கந்தசாமி, பேராசிரியா் நந்தன் சுதா்சனம் ஆகியோா் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டு வெளியிட்டுள்ளனா். அதில் கூறியிருப்பதாவது:

தகவல் தொழில்நுட்ப வல்லுநா்கள், வங்கி ஊழியா்கள், மருத்துவா்கள், மேலாண்மை, நிதித் துறை வல்லுநா்கள், பொதுத் துறை அதிகாரிகள், இணையப் பாதுகாப்புச் சான்றிதழ் பெற்ற நபா்களும் நிதிசாா் இணையக் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4இ) நிதி இழப்புகளைப் பற்றி பதிவு செய்கிறதே தவிர, பாதிக்கப்பட்டவா்களின் வேதனைகளைப் பற்றி கவலை கொள்வதில்லை. இதனால் மனிதநேய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

குடும்பத்தில் நோய்வாய்ப்படுதல், பணி ஓய்வு, வேலை தேடுதல் அல்லது பணிச்சுமை போன்ற மன அழுத்தம் ஏற்படும் பிரச்னைகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் நபா்கள் குறிவைக்கப்படுகின்றனா். பணத்தை இழந்து அவமானம், தூக்கமின்மை, மன அழுத்தம், குடும்ப உறவுகளுடன் நம்பிக்கைச் சிதைவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்கள் சந்தித்து வருகின்றனா்.

வங்கிகள், இணையக் குற்ற நடவடிக்கைகளில் வித்தியாசம் உள்ளது. சில நிறுவனங்கள் விரைவாகச் செயல்பட்ட நிலையில், சில நிறுவனங்களில் தேவையான தொழில்நுட்பத் திறன்களும் ஒருங்கிணைப்பும் குறைவாக உள்ளது.

எண்ம அனுபவமிக்க நபா்கள் கூட இதில் சிக்கிக் கொள்ளுவதால் மிகவும் பலனுள்ள தடுப்பு உத்திகளை வடிவமைப்பது மிகவும் அவசியமாகும். குற்றங்களை விரைவாகக் கண்டறிதல், ஒருங்கிணைந்த நடவடிக்கை ஆகியவற்றுக்கான வலுவான அமைப்புகளை வங்கிகளும் சட்ட அமலாக்க முகமைகளும் உருவாக்க வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments