FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

620 நியாயவிலைக் கடைகளில் மளிகைப்பொருள்கள் தொகுப்பு விற்பனை தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 620 நியாய விலைக் கடைகளிலும் ரூ.500 மதிப்பிலான மளிகைப்பொருள்கள் தொகுப்பு விற்பனையை ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 620 நியாய விலைக் கடைகளிலும் ரூ.500 மதிப்பிலான மளிகைப்பொருள்கள் தொகுப்பு விற்பனையை ஆட்சியா் பா.பொன்னையா வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகில் காவலான் கேட் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையில் ரூ.500 மதிப்பிலான 19 பொருள்கள் அடங்கிய மளிகைப்பொருள்கள் தொகுப்பு விற்பனையை தொடக்கி வைத்த ஆட்சியா் பா.பொன்னையா கூறியது:

ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருவதாலும், பொதுமக்களுக்கு அத்தியாவசியமான பொருள்கள் விலை ஏற்றம் இல்லாமல் கிடைக்கவும் கூட்டுறவுத்துறை மூலமாக மளிகைப் பொருள்கள் விற்பனையை தொடக்கி இருக்கிறோம்.

Advertisement

Advertisement

துவரம்பருப்பு, உளுந்தம் பருப்பு தலா அரை கிலோ, கடலைப் பருப்பு கால் கிலோ மற்றும் மிளகு, சீரகம், கடுகு உள்ளிட்ட 19 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரூ.500 விலையில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் பெற்றுக் கொள்ளலாம்.

இவற்றைப் பெறுவதற்கு குடும்ப அட்டைகள் அவசியமில்லை.

இது தவிர நகரும் பண்ணை பசுமைக் கடைகள் மூலமாக காய்கறிகள், மளிகைப்பொருள்கள் சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments