முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் சாவு

காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார்.

Updated On : 15 ஜூன் 2022, 5:53 pm IST
அ.ரமேஷ்
பகிர்:

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தை சேர்ந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர் உத்தரப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் மாரடைப்பால் காலமான நிலையில், அவரது உடல் வியாழக்கிழமை காஞ்சிபுரம் கொண்டு வரப்பட்டு ராணுவ மரியாதையுடன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

காஞ்சிபுரம் வடிவேல் நகர் விரிவாக்கப் பகுதியான குமாரசாமி நகரை சேர்ந்தவர் அப்பாண்டை ராஜின் மகன் அ.ரமேஷ்(58). இவர் உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலி முகாமில் இந்தோ-திபெத்தியன் எல்லைப் பாதுகாப்பு படையில் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

இவர் செவ்வாய்க்கிழமை பணியாற்றிய இடத்தில் மாரடைப்பால் காலமானதை தொடர்ந்து, அவரது உடல் ராணுவத்தினரால் பெரேலி முகாமிலிருந்து காஞ்சிபுரத்திற்கு கொண்டு வரப்படுகிறது. வியாழக்கிழமை காலையில் அவரது உடலுக்கு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்குகள் நடைபெறுகிறது. இவருக்கு கீதாலெட்சுமி(52) என்ற மனைவியும், வினோத்குமார் (28)என்ற மகனும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments