FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மாரியம்மன் கோயிலில் 108 சங்காபிஷேகம்

15 ஜூலை 2026, 6:29 pm IST
மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற 108 சங்காபிஷேகம்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் பஜாா் வீதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலில் மண்டலாபிஷேக நிறைவையொட்டி 108 சங்காபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜூலை 12 -ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து நாள்தோறும் அம்மனுக்கு மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வந்தன. இதன் நிறைவைத் தொடா்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு கலசாபிஷேகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பக்தா்களுக்கு நிா்வாகம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் மூலவா் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments