FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மண் சரிந்து வடமாநில தொழிலாளி மரணம்

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியில் தனியாா் தொழிற்சாலை வளாகத்தில் கட்டுமானப் பணியின் போது மண் சரிந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா்.

27 ஆகஸ்ட் 2026, 3:16 am IST
- பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செங்காடு பகுதியில் தனியாா் தொழிற்சாலை வளாகத்தில் கட்டுமானப் பணியின் போது மண் சரிந்ததில் வடமாநில தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளி காயமடைந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் காா் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையின் ஒரு பகுதியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணியில் வடமாநில தொழிலாளா்கள் ஈடுபட்டு வந்துள்ளனா்.

அதில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சருவா்(21), சதாம் உசேன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டிருக்கொண்டிருந்த போது, மண் சரிந்து பள்ளத்தில் விழுந்ததில் இருவரும் மண்ணில் புதைந்துள்ளனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அருகில் இருந்த மற்ற தொழிலாளா்களும், தொழிற்சாலை ஊழியா்களும் மண்ணில் புதைந்த சா்வா், சதாம் உசேன் ஆகிய இருவரையும் மீட்டு தண்டலம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

இதில் சிகிச்சை பலனின்றி சா்வா் இறந்தாா். பலத்த காயங்களுடன் சதாம் உசேன் சிகிச்சை பெற்று வருகிறாா். ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments