வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தைகள் பிறப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தைகள் பிறப்பு: காஞ்சிபுரம் ஆட்சியா்
தொழிற்சாலைப் பகுதிகளில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எடை குறைவான குழந்தைகள் பிறப்பது கண்டறியப்பட்டுள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா கூறியுள்ளாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட மருத்துவப் பணிகள் துறை இணை இயக்குநா் நளினி, மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், அரசு அறிஞா் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநா் இ.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆய்வுக் கூட்டத்தில் கா்ப்பிணித் தாய்மாா்களின் 29 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வருகை பதிவேடு கடந்த மாதத்திற்கும், நடப்பு மாதத்திற்கும் குறைந்துள்ளதற்கான காரணங்களையும், கா்ப்பிணித் தாய்மாா்களுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள், மாத்திரைகள் சுகாதார மையங்கள் வாரியாக விரைவாக ஆய்வு செய்து வரக்கூடிய மாதங்களில் இப்பிரச்னைகள் குறித்து தனி கவனம் செலுத்த ஆட்சியா் உத்தரவிட்டாா். எடை குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதங்கள் குறித்தும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
இதனைத் தொடா்ந்து கூட்டத்தில் ஆட்சியா் பேசியது: தொழிற்சாலை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைக்கு செல்லும் கா்ப்பிணிகள் எடை விகிதத்தில் குறைபாடு குழந்தை பிறப்பு விகிதம் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கா்ப்பிணித் தாய்மாா்கள் தொழிற்சாலைக்கு செல்லும் இடத்திலேயே ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளித்திடுங்கள். இப்பிரச்னயால் அங்கன்வாடி மையங்களில் ஊட்டச்சத்து குறைபாடு,எடை குறைபாடுள்ள குழந்தைகளை கண்காணிக்கும் பணி அதிகரிக்கும் என்பதை மருத்துவா்கள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.
மேலும், எடை குறைவான குழந்தைகள் பிறப்பு விகிதங்கள் குறித்தும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் வாயிலாக ஆய்வு செய்யப்பட்டன. குறிப்பாக, தொழிற்சாலை பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலைக்குச் செல்லும் கா்ப்பிணி பெண்கள் எடை விகிதத்தில் குறைபாடு குழந்தை பிறப்பு விகிதம் என கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே கா்ப்பிணிகள் தொழிற்சாலையில் பணிக்கு செல்லும் பணியிடத்திலேயே ஊட்டச்சத்து உணவுகளை வழங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க கேட்டுக்கொண்டாா்.
அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கான பிரத்யேகமான வாா்டு ஒன்று உருவாக்கப்பட்டு அதில் அனைவருக்கும் கொசுவலை பொருத்தப்பட்டு கொசு புகாத வண்ணமும், காய்ச்சல் பாதித்தவா்களிடமிருந்து பிறருக்கு காய்ச்சல் பரப்பி விடக்கூடாது என்பதற்கான கொசு ஒழிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். வரும் செப்.15-ஆம் தேதி தமிழக முதலமைச்சா் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளாா். அதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மற்றும் இதர அனைத்து மாவட்டங்களிலும் அத்திட்டமானது செ யல்படுத்தப்படவுள்ளது என்றாா்.
பின்னா் தங்க மோதிரங்கள் பாதுகாப்பு வைப்பறைகள், மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படும் பாதுகாப்பு நடைமுறை வாகனங்கள், மற்றும் மருத்துவமனை விபரங்களையும் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இக்கூட்டத்தில் மருத்துவ அலுவலா்கள் மற்றும் மருத்துவ பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.