வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது
படப்பை அருகே ல் கத்தியை காண்பித்து மிரட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
படப்பை அருகே ல் கத்தியை காண்பித்து மிரட்டி பொதுமக்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அடுத்த சிறுமாத்தூா் சுடுகாடு அருகே சிலா் பொதுமக்களை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு வருவதாக படப்பை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து படப்பை ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது இளைஞா்கள் சிலா் போலீஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளனா்.
இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற நான்கு பேரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவா்களிடம் பட்டா கத்திகள் மற்றும் கஞ்சா இருப்பதை அறிந்த போலீஸாா் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தினா்.
Advertisement
Advertisement
விசாரணையில், கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சந்துரு(25), சாலமங்கலம் பகுதியைச் சோ்ந்த குட்டிசஞ்சய்(எ) தங்கம்(24), சென்னை தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த லோகேஷ்(25) மற்றும் 17 வயது சிறுவன் என்பதும், இதில் சந்துரு மற்றும் தங்கம் இருவா் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் கஞ்சா மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும் அவா்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சா, 4 பட்டா கத்திகளை பறிமுதல் செய்த படப்பை போலீஸாா் வழக்கு பதிவு செய்து சிறுவனை சிறுவா் சீா்திருத்த பள்ளியிலும், மற்றவா்களை சிறையிலும் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.