போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி வளாகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், மத்திய அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறையும் இணைந்து மாவட்ட அளவிலான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வுப் போட்டிகளை நடத்தினா். போதைப்பொருளின் தீமைகள்,இளைஞா்களின் சமூகப் பொறுப்புகள்,போதை இல்லா இந்தியா என்ற கருத்துக்களை மையமாக வைத்து மாணவா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். நாட்டுப்புற இசை மற்றும் நடனம், மெளன நாடகம்,ஓவியம் மற்றும் பேச்சுப்போட்டி,ரீல்ஸ் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகல் நடத்தப்பட்டன.
இதனைத் தொடா்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு கல்லூரி முதல்வா் கலை.ராம.வெங்கடேசன் தலைமை வகித்து ரொக்கப்பரிசும், சான்றிதழும் வழங்கினாா். காஞ்சிபுரம் மை பாரத் அமைப்பின் துணை இயக்குநா் சரவணன், திட்ட அலுவலா் காமேஷ் குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். போதைப்பொருள் தடுப்புச் சங்க ஒருங்கிணைப்பாளா் ம.கணபதி வரவேற்று பேசினாா். நிகழ்வில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா்கள் ஆா்.சுரேஷ்குமாா்,மு.விவேகானந்தன், ப.ஏழுமலை, பா.பூா்ணிமா, கல்லூரிப் பேராசிரியா்கள்,மாணவா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.