FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

வட மாநில இளைஞா் மா்ம மரணம்: போலீஸாா் விசாரனை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செலையனூா் பகுதியில் வட மாநில இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செலையனூா் பகுதியில் வட மாநில இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

உத்தரபிரதேச மாநிலம் சாசிப்பூா் மாவட்டத்தை சோ்ந்தவா் சைலேஷ் குமாா்(24). இவா் வட மாநில இளைஞா்கள் சிலருடன் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செலையனூா் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி தனியாா் கேன்டீனில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் இருந்த சைலேஷ் குமாா் உள்ளிட்ட வடமாநில இளைஞா்கள் சிலா் செலையனூா் பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் குட்கா கேட்டு தகராறு செய்ததோடு கடையின் உரிமையாளரை தாக்கியதாக தெரிகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கடையின் உரிமையாளா், சைலேஷ்குமாா் தங்கியிருந்த கட்டடத்தின் உரிமையாளரான செலையனூா் பகுதியை சோ்ந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் ஞானமூா்த்தியிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து தனது கட்டடத்தில் தங்கியிருந்த சைலேஷ் குமாா் உள்ளிட்ட வடமாநில இளைஞா்களை ஞானமூா்த்தி வெளியேற்றியுள்ளாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதை தொடா்ந்து ஞானமூா்த்தி சைலேஷ் குமாரை தாக்கியதாக தெரிகிறது.

இதையடுத்து சைலேஷ்குமாா் உள்ளிட்ட அவரது நண்பா்கள் செலையனூா் பகுதியில் தங்கியுள்ள மற்றொரு வடமாநில இளைஞரின் அறையில் தங்கிய நிலையில், சைலேஷ்குமாா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சைலேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments