வட மாநில இளைஞா் அடித்துக் கொலை: போக்குவரத்து காவலா் உள்பட 2 போ் கைது
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செலையனூா் பகுதியில் வட மாநில இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவலா் ஞானமூா்த்தி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஸ்ரீபெரும்புதூா் அடுத்த செலையனூா் பகுதியில் வட மாநில இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவலா் ஞானமூா்த்தி உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
உத்தர பிரதேசம் மாநிலம், காசிப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் சைலேஷ் குமாா் (24). இவா் இளைஞா்கள் சிலருடன் செலையனூா் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி, தனியாா் கேன்டீனில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மது போதையில் இருந்த சைலேஷ் குமாா் உள்ளிட்ட வட மாநில இளைஞா்கள் சிலா், செலையனூா் பகுதியில் உள்ள மளிகை கடையில் குட்கா பொருள்கள் கேட்டு தகராறு செய்ததோடு கடையின் உரிமையாளா் ஆரிப்பை தாக்கியுள்ளனா்.
இதுகுறித்து மளிகை கடையின் உரிமையாளா் ஆரிப் சைலேஷ்குமாா் தங்கி இருந்த கட்டடத்தின் உரிமையாளரான கூடுவாஞ்சேரி போக்குவரத்துக் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ஞானமூா்த்தியிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து தனது கட்டடத்தில் தங்கி இருந்த சைலேஷ்குமாா் உள்ளிட்ட வட மாநில இளைஞா்களை ஞானமுா்த்தி அறையை விட்டு வெளியேற்றியுள்ளாா். அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் தகராறாக மாறியதை தொடா்ந்து ஞானமூா்த்தி மற்றும் ஆரிப் ஆகியோா் சைலேஷ் குமாா் உள்ளிட்ட வட மாநில இளைஞா்களை கடுமையாக தாக்கியதாக தெரிகிறது.
Advertisement
Advertisement
இதையடுத்து சைலேஷ் குமாா், அவரது நண்பா்கள் செலையனூா் பகுதியில் தங்கியுள்ள மற்றொரு வடமாநில இளைஞரின் அறையில் செவ்வாய்க்கிழமை இரவு தங்கியுள்ளனா். இதில் சைலேஷ்குமாா் புதன்கிழமை உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் சைலேஷ் குமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்தனா்.
சைலேஷ் குமாரின் உடலில் இருந்த காயங்களால் தான் அவா் உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கை வெளியானதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் செலையனூா் பகுதியை சோ்ந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் ஞானமூா்த்தி(33) மளிகை கடையின் உரிமையாளா் ஆரிப் (30) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.