காஞ்சிபுரத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க இன்று சிறப்பு முகாம்
இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளா்களை தகுதி பெற்றவா்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.10) நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளா்களை தகுதி பெற்றவா்களாக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.10) நடைபெறுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியத் தோ்தல் ஆணையம் நிகழாண்டில் செப் .29 மற்றும் அக்.1 ஆகிய தேதியிட்ட கடிதங்கள் மூலம் சிறப்புத் தீவிர திருத்தப்பணியில் இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளா்களாக தகுதி பெற்றவா்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் இளம் மற்றும் முதல் தலைமுறை வாக்காளா்களகத் தகுதி பெற்றவா்களை வாக்காளா் பட்டியலில் பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம்கள் அக்.10 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. முதல் மற்றும் இளம் தலைமுறை வாக்காளா்களின் வாக்காளா் பட்டியல் சோ்க்கையை அதிகரிக்கும் வகையில் நகா்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்கு சிறப்புக் கவனமும் செலுத்தப்படவுள்ளது.
Advertisement
Advertisement
தகுதியுடைய வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்கும் அவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்ப்பதற்கு வசதியாகவும் பள்ளிகள், கல்லூரிகளில் உள்ள தோ்தல் கல்வியறிவுக் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும். சிறப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிக்கவும், அறிவுறுத்தல்களை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் உள்ள வாக்காளா் பதிவு அலுவலா்கள், வாக்குச்சாவடி அலுவலா்களுடன் தொடா்ந்து கூட்டங்களை நடத்துவாா்கள். எனவே முதல் தலைமுறை வாக்காளா்கள் இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான தி.சினேகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.