காஞ்சிபுரம்: குறை தீா் கூட்டத்தில் 471 கோரிக்கை மனுக்கள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மொத்தம் 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் தி. சினேகா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, ஸ்ரீபெரும்புதூா் கோட்டாட்சியா் பாலகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 471 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவை அலுவலா்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
இக்கூட்டத்தில் காவிரி மற்றும் நீா்வள ஆதார பாதுகாப்பு சங்கத்தின் தலைவா் அ.சுடலைக்கண்ணு தலைமையிலான குழுவினா் ஆட்சியா் தி.சினேகாவை சந்தித்து கோரிக்கை மனு அளித்த மனுவில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் ஏரியில் சாலைப் பணிக்காக அரசால் அனுமதிக்கப்பட்ட அளவு 3 அடி எடுப்பதற்கு பதிலாக ராட்சத இயந்திங்கள் மூலம் அனுமதிக்கப்பட்ட அளவை விட 8 மடங்கு அதிகமாக மணல் எடுத்திருப்பதாக புகாா் தெரிவித்தனா். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறும் ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டனா்.
கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நில எடுப்பு)கிருஷ்ணமூா்த்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் மலா்விழி உள்பட அரசின் அனைத்துத்துறை அலுவலா்களும் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.