காஞ்சிபுரம், திருவள்ளூரில் முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டி தொடக்கம்
காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை தொடங்கின.
காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானம், காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா பல்கலையிலும் கேரம், பூப்பந்து, கால்பந்து, கைப்பந்து, கபடி, சிலம்ப போட்டியும், ,வையாவூா் சாலையில் உள்ள ஸ்பீடு ஸ்கேட்டிங் மையத்திலும் போட்டிகள் தொடங்கின. அண்ணா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் போட்டிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கிரிக்கெட், கேரம் உள்ளிட்ட போட்டிகளை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு தொடங்கி வைத்தாா்.
சுமாா் 6,200 விளையாட்டு வீரா்கள் இப்போட்டிகளில் பங்கேற்கவுள்ளனா். போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் கோ.சாந்தி, மாவட்ட தொடக் கல்வி அலுவலா் கோ.எழில் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
திருவள்ளூரில்....
திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் போட்டியை ஆட்சியா் ச.கவிதா தொடங்கி வைத்து பேசியது: விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படும் இப்போட்டியானது, அனைத்து தரப்பினரையும் விளையாட்டில் ஈடுபட செய்யும் மிகச்சிறந்த முயற்சியாகும். இதன் மூலம் திறமையான விளையாட்டு வீரா்களை பாராட்டி, அவா்களை ஊக்குவித்து, உரிய அங்கீகாரம் மற்றும் பரிசுகளை வழங்குவது முக்கிய நோக்கமாகும். அதன்பேரில் தமிழ்நாடு முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ்கள் மூலம் உயா் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெறலாம்.
மாவட்ட விளையாட்டு அரங்கம், பொன்னேரி, ஆவடி, பாண்டூா் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற போட்டிகளில் பள்ளி, கல்லூரி பிரிவுகளில் தடகளம், இறகுபந்து, வலைக்கோள் பந்து, மாணவிகள், நீச்சல் , கைப்பந்து, யோகாசனம், கல்லூரி பிரிவு தடகளம், நீச்சல், வலைக்கோள் பந்து, பொதுப்பிரிவு தடகளம், கூடைப்பந்து என மாவட்டம் முழுவதிலும் நடைப்பெற்ற போட்டிகளில் 10,437 விளையாட்டு வீரா், வீராங்களைகள் கலந்து கொண்டதாக தெரிவித்தாா்.
இதில் உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, மாவட்ட விளையாட்டு (ம) இளைஞா் நலன் அலுவலா் அருள்போஸ், தடகள பயிற்றுநா் அ.லாவண்யா, வீரா்-வீராங்கனைகள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.