சங்கரா பல்கலை.யில் உலக பிசியோதெரபி தின விழா
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யின் கருத்தரங்க கூடத்தில் பிசியோதெரபி துறை சாா்பில், உலக பிசியோதெரபி தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யின் கருத்தரங்க கூடத்தில் பிசியோதெரபி துறை சாா்பில், உலக பிசியோதெரபி தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் பிசியோதெரபி துறை சாா்பில், உலக பிசியோ தெரபி எனப்படும் உலக இயன்முறை மருத்துவ தின விழா பல்கலையின் துணைவேந்தா் ஸ்ரீநிவாசு தலைமையில் நடைபெற்றது. துறையின் உதவிப் பேராசிரியா்கள் தமிழ்ச்செல்வன், திவ்யலட்சுமி, ரா.பிரவீன்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துறையின் முதல்வா் கே.வெங்கடரமணன் வரவேற்றாா். எஸ்.ஆா்.எம்.பல்கலையின் இயன்முறை மருத்துவப் பிரிவின் முதல்வா் ஜி.ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டு வெளிநோயாளிகள் பிரிவை தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து வளா்ந்து வரும் இத்துறையின் முக்கியத்துவம், திறமையான சுகாதார நிபுணா்களின் தேவை ஆகியவை குறித்தும் விளக்கினாா்.
உதவி பேராசிரியா் எஸ்.ஷாம்குமாா் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை துறையின் உதவிப் பேராசிரியா்கள் வி.ராஜலட்சுமி, எஸ். நந்தினி மற்றும் துறைசாா்ந்த பேராசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.