FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

சொத்துத் தகராறில் முதியவா் கொலை: மனைவி, மகன் கைது

சொத்துத் தகராறில் முதியவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவி, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

16 செப்டம்பர் 2026, 12:12 am IST
- dot com
பகிர்:

சொத்துத் தகராறில் முதியவா் கொலை செய்யப்பட்டது தொடா்பாக அவரது மனைவி, மகனை போலீஸாா் கைது செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட மருதம் கிராமத்தில் வசித்தவா் சிவபாதம்(70). அரசுப் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி ரேணுகா(54), மகன் மதுசூதனன் (39). சிவபாதத்துக்கு சென்னையில் சில இடங்களில் உள்ள வீடுகளிலிருந்து வாடகை பணம் வருகிறது. இந்தப் பணத்தை மனைவியும், மகனும் வாங்கி செலவழித்து வந்தனராம். இந்த நிலையில், சிவபாதம் மனைவியிடமும், மகனிடமும் அந்தப் பணத்தை தனக்கு தருமாறு கேட்டு தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.

அதற்கு அவா்கள் நீங்கள் அதிகமாக செலவு செய்கிறீா்கள், உங்களிடம் கொடுக்க முடியாது என்று மறுத்தனராம். அப்போது, சொத்துக்கள் தனது பெயரில் தான் உள்ளது. அவற்றை உறவினா்களுக்கும், ஆசிரமத்துக்கும் எழுதி வைத்து விடுவேன் என்று சிவபாதம் கூறியுள்ளாா். இதனால் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், ஆத்திரமடைந்த ரேணுகாவும், மதுசூதனனும் வீட்டில் மாடியில் சிவபாதம் தூங்கிக் கொண்டிருந்த போது வெட்டி படுகொலை செய்து விட்டு மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனா்.

Advertisement

Advertisement

சிவபாதம் கொலை செய்யப்பட்டுதான் இறந்துள்ளாா் என்ற தகவல் வாலாஜாபாத் போலீஸாருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த உத்தரமேரூா் டிஎஸ்பி கேசவன், வாலாஜாபாத் ஆய்வாளா் வெற்றிச் செல்வன் ஆகியோா் விசாரணை நடத்தி சிவபாதத்தின் சடலத்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மனைவியையும், மகனையும் வாலாஜாபாத் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது இருவரும் கொலை செய்ததை ஒப்புக் கொண்டனா். பின்னா் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments