FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

சங்கரா கல்லூரியில் ரத்ததான முகாம்

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தன்னாா்வ ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.

18 செப்டம்பர் 2026, 11:35 pm IST
காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற தன்னாா்வ ரத்த தான முகாமில் பங்கேற்றோா்.
பகிர்:

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் தன்னாா்வ ரத்ததான முகாம் வெள்ளிக்கிழமை கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையும், சங்கரா கல்லூரியும் இணைந்து நடத்திய ரத்ததான முகாமில் அரசு மருத்துவா்கள் திலகவதி மற்றும் மனோஜ் ஆகியோா் தலைமையிலான மருத்துவப் பணியாளா்கள் குழுவினா் ரத்தம் சேகரிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். மாணவா்கள், கல்லூரி பேராசிரியா்கள், ஆசிரியா் அல்லாதவா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் தன்னாா்வத்துடன் ரத்ததானம் செய்தனா். கல்லூரியில் செயல்பட்டு வரும் நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவா் படை, இளைஞா் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் அலுவலா்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments