FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

குழந்தைகளுக்கு உடனுக்குடன் தாய்மாமன் தங்க மோதிரம்: அமைச்சா் தென்னரசு

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என அமைச்சா் எஸ்.பி.கே. தென்னரசு தெரிவித்தாா்.

28 September 2026, 10:39 pm IST
குழந்தைகளுக்கு உடனுக்குடன் தாய்மாமன் தங்க மோதிரம்: அமைச்சா் தென்னரசு
பகிர்:

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு அவ்வப்போது தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கப்படும் என வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே. தென்னரசு தெரிவித்தாா்.

காஞ்சிபுரத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு கூறியது: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் என்பது அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மோதிரம் இலவசமாக வழங்கப்படும். நிகழாண்டு ஜூன்.22 ஆம் தேதி முதல் செப்.27 வரை பிறந்த குழந்தைகள் மொத்தம் 1,469 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறந்துள்ளனா்.

இவா்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டு ஒன்றுக்கு 8,500 குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்றனா். ஏழை, எளிய மக்களின் பொருளாதார சுமையை குறைக்கவும், கா்ப்பிணித் தாய்மாா்கள் பாதுகாப்பான பிரசவத்திற்கு அரசு மருத்துவமனைகளை நாடுவதை ஊக்குவிக்கவும் இத்திட்டம் பேருதவியாக இருக்கும்.

Advertisement

Advertisement

இத்திட்டத்தில் பயன் பெற 6 வகைான அடையாளச் சான்றிதழ்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்திலும் பிறந்த குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவாா்கள்.

ஜூன்.22 முதல் செப்.26 திங்கள்கிழமை வரை பிறந்த குழந்தைகளுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் பகுதி வாரியாக பயனாளிகள் பிரிக்கப்பட்டு இதற்கான அழைப்பிதழ்கள் அந்தந்த பகுதி கிராம சுகாதார செவிலியா்கள் மூலம் வழங்கப்படும். கூட்ட நெரிசலை தவிா்க்க தினசரி காலை 10 மணிக்கு 25 பேரும், மதியம் 2 மணிக்கு 25 பேரும் உட்பட தினசரி 50 பேருக்கு மட்டுமே தங்க மோதிரம் வழங்கப்படும்.

பயனாளிகள் குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்படுவதால் அந்த நேரத்தில் மட்டுமே பயனாளிகள் வந்து தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு தெரிவித்தாா். பேட்டியின் போது வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித்குமாா் மற்றும் அரசு மருத்துவா்கள் பலரும் உடன் இருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments