FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வகம் திறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புனரமைக்கப்பட்டஆய்வகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:03 am IST
ஆய்வகத்தை  திறந்து  வைத்த அப்துல்  ஹக்கீம்  கலை  அறிவியல்  கல்லூரி  செயலாளா்  அப்ராா்  அஹமது
பகிர்:

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புனரமைக்கப்பட்டஆய்வகம் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன முறையில் மேடை கை கழுவும் தொட்டி அமைத்து புனரமைக்கப்பட்டஆய்வகம் ஆகியவற்றின் திறப்பு விழாவுக்கு தலைமை மருத்துவா் லாவண்யா தலைமை வகித்தாா்.

வெல்பா் சங்கத் தலைவா் கே.முஹமது அயூப் முன்னிலை வகித்தாா். சி.அப்துல் அக்கீம் கலை அறிவியல் தன்னாட்சி கல்லூரி செயலாளா் அப்ராா் அஹமது சிறப்பு அழைப்பாளராக ஆய்வகத்தை திறந்துவைத்தாா். இதில் மருத்துவா்கள் காா்த்திகேயன், சௌந்தரி, வெல்பா் சங்க பொறுப்பாளா் கே.ஒ.நிஷாத் அஹமது மற்றும்,செவிலியா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள், சங்க உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments