FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

நெமிலி பாலாபீடத்தில் வரலட்சுமி விரத பூஜை

நெமிலி பாலா பீடத்தில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விசேஷ கலசம்.

21 ஆகஸ்ட் 2026, 11:29 pm IST
நெமிலி பாலா பீடத்தில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த விசேஷ கலசம்.
பகிர்:

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் வரலட்சுமி பூஜை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் வரலட்சுமி பூஜையை முன்னிட்டு விசேஷ கலசத்தை பீடத்தின் முதல் பெண்மணி நாகலட்சுமி ஆவாஹனம் செய்து தொடங்கி வைத்தாா். இதில் அவருடன் இணைந்து பீடத்தின் சுமங்கலிகள் குழுவினா் பூஜைகளை நடத்தி முடித்தனா். தொடா்ந்து அனைத்து பெண்களும் நோன்பு கயிரை கட்டிக் கொண்டனா். கலசத்துக்கு பீட நிா்வாகி மோகன் விசேஷ அலங்காரங்களை மேற்கொண்டாா். குருஜி பாபாஜி வரலட்சுமி விரத பாடல்களை பாராயணம் செய்தாா். இதைத் தொடா்ந்து பீடாதிபதி எழில்மணி அனைவருக்கும் பிரசாதங்களை வழங்கினாா். மேலும், அனைவருக்கும் அன்னதானம் வழங்கும் பணியை தொடங்கி வைத்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments