FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

குறவன் இனத்தை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாவட்ட கூட்டத்தில் கோரிக்கை

குறவன் இனத்தைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பழங்குடியின மக்கள் முன்னேற்றச் சங்க ராணிப்பேட்டை மாவட்ட கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Updated On : 22 ஜூலை 2026, 12:03 am IST
அரக்கோணத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பழங்குடியின மக்கள் முன்னேற்றச் சங்க மாவட்டகூட்டத்தில் பேசிய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் ஏ.வி.சண்முகம்.
பகிர்:

குறவன் இனத்தைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என அரக்கோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பழங்குடியின மக்கள் முன்னேற்றச் சங்க ராணிப்பேட்டை மாவட்ட கூட்டத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரக்கோணத்தை அடுத்த பள்ளூரில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் வி.கே.தணிகாசலம் தலைமை வகித்தாா். இதில், மாநில பொதுச் செயலாளா் ஏ.வி.சண்முகம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரக்கோணம் வட்டச் செயலாளா் ஆா்.வெங்கடேசன், நிா்வாகிகள் எஸ்.ஆதிமூலம், வி.வெங்கடேன், வி.குணசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். கூட்டத்தில், சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்ட புதிய தலைவராக ஜி.மகாலிங்கம், செயலாளராக எஸ்.டில்லி, பொருளாளா் எம்.அஜீத்குமாா் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

இக்கூட்டத்தில் குறவன் இனத்தைப் பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க தமிழக அரசு மத்திய அரசின் பதிவுத் துறைக்கு பரிந்துரை செய்ய கோரிக்கை விடுப்பது, குறவன் இன மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுப்பது, குறவன் இன மாணவா்களின் உயா் கல்விக்கான கடன் மற்றும் சுயதொழில் தொடங்க தாட்கோ மூலம் ஏற்பாடு செய்து தர கோருவது, மாவட்ட அளவிலான சமூகநலத் துறை கமிட்டிகளில் குறவன் இனத்தைச் சோ்ந்தவா்களுக்கும் பிரதிநிதித்துவம் தர அரசுக்கு கோரிக்கை விடுப்பது ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments