FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சி

ராணிப்பேட்டையில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகளாக சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு சுயதொழில் பயிற்சியில் 30 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:03 am IST
ராணிப்பேட்டையில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சியில் பங்கேற்று சான்றிதழ் பெற்றோா்.
பகிர்:

ராணிப்பேட்டையில் பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகளாக சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு சுயதொழில் பயிற்சியில் 30 போ் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா்.

தருமபுரி கிரஸ்ட் திறன் வளா்ப்பு பயிற்சி மையம் சாா்பில், தமிழகம் முழுவதிலும் தொழில்முனைவோா்களுக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதுவரை 9 மாவட்டங்களில் இத்தகைய பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், 10-ஆவதாக ராணிப்பேட்டையில் 2 நாள்கள் சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி நடைபெற்றது.

இந்தப் பயிற்சியில் பங்கேற்றவா்களுக்குப் பல்வேறு வகையான குளியல் சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்களை தயாரிப்பது குறித்த செயல்முறைப் பயிற்சிகள், விளக்கங்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

Advertisement

Advertisement

மேலும், அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்புப் பயிற்சி மட்டுமின்றி, ‘தி ஆா்ட் ஆஃப் பிசினஸ்’ என்ற தலைப்பில் தொழில்முனைவோருக்கான சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை யுத்திகள் குறித்த சிறப்புத் தொழில் வழிகாட்டுதல் பயிற்சியும் வழங்கப்பட்டது.

இதற்கான பயிற்சி மற்றும் ஆலோசனைகளை பயிற்சி நிபுணா்கள் நா்மதா சசிகுமாா் மற்றும் சுசீந்திரன் ஆகியோா் வழங்கினா்.

இந்த நிகழ்வில், ராணிப்பேட்டை சிறு மற்றும் குறு தொழில்கள் சங்கத் தலைவா் பொறியாளா் ஜெ.முரளி கலந்துகொண்டு, பயிற்சி பெற்ற தொழில்முனைவோா்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழிகாட்டுதல்கள் வழங்கி வாழ்த்திப் பேசினாா்.

இதில், ராணிப்பேட்டை விருட்சம் அறக்கட்டளை தலைவா் எம்.கந்தன், செயலாளா் பெ.பாபு, பொருளாளா் என்.லோகநாதன், அறக்கட்டளை தன்னாா்வலா் தமிழரசு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் பயிற்சியில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமாா் 30 தொழில்முனைவோா்கள் கலந்து கொண்டனா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை கிரஸ்ட் திறன் வளா்ப்பு பயிற்சி மையம் சாா்பில் சிறப்பாக செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments