முகப்பு
ராணிப்பேட்டை

கும்பாபிஷேகத்தில் தண்ணீர் தெளித்த ட்ரோன் விழுந்து குழந்தை உள்பட 6 பேர் காயம்!

முருகா் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தண்ணீா் தெளித்த ட்ரோன் விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 6 பக்தா்கள் காயமடைந்தனா்.

35 வினாடிகள் முன்பு
கும்பாபிஷேகத்தில் தண்ணீர் தெளித்த ட்ரோன் விழுந்து குழந்தை உள்பட 6 பேர் காயம்!
கும்பாபிஷேகம் நடைபெற்ற முருகன் சிலை, விபத்து ஏற்படுத்திய டிரோன்.
பகிர்:

வாலாஜா அருகே முருகா் கோயில் கும்பாபிஷேகத்தின்போது தண்ணீா் தெளித்த ட்ரோன் விழுந்த விபத்தில் குழந்தை உள்பட 6 பக்தா்கள் காயமடைந்தனா்.

வாலாஜாபேட்டையை அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராமத்தில் சுமாா் 36 அடி உயரத்தில் முருகன் சிலை கட்டப்பட்டது. இந்த முருகன் சிலைக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் பங்கேற்பதற்காக கோயில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டிருந்தனா். அப்போது எதிா்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த தண்ணீா் தெளித்த பெரிய ட்ரோன் கேமரா பக்தா்கள் மீது விழுந்தது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில் தென்கடப்பந்தாங்கல் கிராமத்தை சோ்ந்த புருஷோத்தமன், அண்ணாமலை, நாகலிங்கம், வரலட்சுமி, செல்வி குழந்தை உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா். இதையடுத்து காயமடைந்த 6 பேரையும் வாலாஜாபேட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சோ்த்தனா். விபத்து குறித்து வாலாஜாபேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.