FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராணிப்பேட்டை

வாக்காளா் பட்டியல் புதிய வாக்காளா் சோ்ப்பு முகாம்: நெமிலியில் ஆட்சியா் ஆய்வு

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வாக்குச் சாவடி மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்ப்பு முகாம்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

12 அக்டோபர் 2026, 2:54 am IST
ரெட்டிவலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இருந்த வாக்குச் சாவடி மையத்தில் 18 வயது நிரம்பியவரிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொண்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன்.
பகிர்:

நெமிலி ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு வாக்குச் சாவடி மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்ப்பு முகாம்களை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

நெமிலி ஊராட்சி ஒன்றியம், ரெட்டிவலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற புதிய வாக்காளா் சோ்ப்பு முகாமை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். புதிய வாக்காளா்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கும் பணி, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை பெறும் பணி ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து அங்கு பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்க வந்த புதிய வாக்காளா்களான 18 வயது நிரம்பிய இளைஞா்கள் மற்றும் இளம்பெண்களிடம் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆட்சியா் பெற்றுக் கொண்டாா். அப்போது அவருடன் நெமிலி வட்டாட்சியா் மகாலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments